Anbulla bul bul / அன்புள்ள புல் புல்



  • ₹220

  • SKU: YP0016
  • ISBN: 9789388133005
  • Author: Suneel Krishnan
  • Language: Tamil
  • Pages: 182
  • Availability: In Stock

காந்தி எனும் ஆளுமையை பற்றி பேசும் கட்டுரைகளை கால வரிசைப்படி அமைத்திருக்கிறேன். மில்லியின் காந்தி அவருடைய தென்னாப்ரிக்க வாழ்வை சொல்வதாகும். ஜெயராம்தாஸ் இருபதுகளின் மத்தியில் காந்தியை சந்தித்த சிங்கள ஆளுமை. அதற்கு அடுத்து காந்தியும் பகத்தும் கட்டுரை காலம்காலமாக பகத் சிங் தூக்கிற்கு காந்தி எதுவும் செய்யவில்லை எனும் அவதூறை நோக்கி எழுதப்பட்டுள்ளது. அடுத்த கட்டுரை தண்டி யாத்திரையை பற்றியது. காந்தியும் 55 கோடி கட்டுரை காந்தி மேற்கொண்ட இறுதி உண்ணா நோன்பை பற்றிய கட்டுரை. அன்புள்ள புல் புல் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அதுவே இத்தொகுதியின் பெயரும் கூட. காந்தியின் நகைச்சுவை உணர்வை பற்றியது. வின்சன்ட் ஷீன் எழுதிய காந்தி சரிதை பற்றிய கட்டுரை காந்தியின் முழு வாழ்வை குறித்து ஒரு சித்திரம் அளிக்க வேண்டும் என்பதற்காக. இறுதி கட்டுரை ‘காந்தியை அறிதல்’ தரம்பாலின் நூலை முன்வைத்து காந்தியின் சாரத்தை, அவருடைய முக்கியத்துவத்தை சொல்லும் முழுமை பார்வை கொண்டது. - சுனில் கிருஷ்ணன்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up